என் மலர்tooltip icon

    செய்திகள்

    அந்தியூர் குருநாத சாமி கோவில் விழா
    X

    அந்தியூர் குருநாத சாமி கோவில் விழா

    அந்தியூரில் உள்ள புகழ் மிக்க குருநாதசாமி கோவில் தேர்திருவிழா பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கி நடந்து வருகிறது. இன்று (புதன்கிழமை) விழாவையொட்டி கொடியேற்றம் நடக்கிறது.
    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள புகழ் மிக்க குருநாதசாமி கோவில் தேர்திருவிழா பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கி நடந்து வருகிறது. இன்று (புதன்கிழமை) விழாவையொட்டி கொடியேற்றம் நடக்கிறது.

    தேர்திருவிழாவையொட்டி புகழ்பெற்ற மாட்டு சந்தையும், குதிரை சந்தையும் நடைபெறும். குதிரை சந்தையின் போது குதிரையேற்றம் நிகழ்ச்சி நடத்துவது தொடர்பான குளறுபடி இருந்தது. குதிரையில் ஏறி செல்லக் கூடாது என எதிர்ப்பலை கிளம்பியது.

    இதுதொடர்பாக மாவட்ட வருவாய் அதிகாரி சதீஸ் தலைமையில் பேச்சு வார்த்தை நடந்தது. விதிமுறைக்கு உட்பட்டு நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி புகழ்பெற்ற குதிரை சந்தை கடந்த ஆண்டைபோல் சிறப்பாக நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்தநிலையில் குதிரை சந்தை நடத்த உள்ள இடத்து சொந்தக்காரர்கள் இப்போது போர்கொடி தூக்கி உள்ளனர். இந்த குதிரை சந்தையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என கூறி உள்ளனர்.

    இதனால் குதிரை சந்தை நடத்துவதில் புதிய சர்ச்சை தற்போது ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக இன்று மதியம் கலெக்டர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ளும் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் குதிரை சந்தை நடக்கும் இட உரிமையாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
    Next Story
    ×