என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிராமணவயல் புலிக்குட்டி அய்யனார் கோவிலில் குதிரை எடுப்பு விழா
    X

    பிராமணவயல் புலிக்குட்டி அய்யனார் கோவிலில் குதிரை எடுப்பு விழா

    அறந்தாங்கியை அடுத்த பிராமணவயல் புலிக்குட்டி அய்யனார் கோவிலில் குதிரை எடுப்பு விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    மணமேல்குடி ஒன்றியம் பிராமணவயல் புலிக்குட்டி அய்யனார் கோவில் அப்பகுதியல் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. இக்கோவிலில் குதிரை எடுப்பு திருவிழா நடைபெற்றது.

    திருவிழாவிற்காக நாகுடி அருகே உள்ள கீழ்குடி வேளார் சமூகத்தினர் செய்திருந்த 50க்கும் மேற்பட்ட சாமி, குதிரை, காளை உள்ளிட்ட சிலைகளை கிராமத்தினர் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

    தொடர்ந்து கோவில் வளாகத்தில் சிலைகளுக்கு கண்திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பிராமணவயல் கிராமத்தினர் செய்திருந்தனர்.
    Next Story
    ×