என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷான் மார்ஷ் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப்
    X
    ஷான் மார்ஷ் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப்

    காயத்தால் ஷான் மார்ஷ் விலகல்: ஆஸ்திரேலியா அணியில் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப்

    உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணியில் இருந்து மிடில் ஆர்டர் இடது கை பேட்ஸ்மேனான ஷான் மார்ஷ் காயத்தால் விலகியுள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணியில் இடது கை பேட்ஸ்மேனான ஷான் மார்ஷ் இடம்பிடித்திருந்தார். அவர் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது பேட் கம்மின்ஸ் வீசிய பந்து கையை பலமாக தாக்கியது.

    இதனால் உடனடியாக மருத்துவசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதில் அவரது கையில் முறிவு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் உடனடியாக அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    Next Story
    ×