என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி
    X
    இங்கிலாந்து கிரிக்கெட் அணி

    மலைபோல் நம்பியிருந்த இந்தியா கைவிட்டதால், மேட்ச் பிக்சிங் என பாகிஸ்தான் ரசிகர் குற்றச்சாட்டு

    இங்கிலாந்தை எப்படியும் இந்தியா வீழ்த்தி, தங்களது அணிக்கு மிகப்பெரிய அளவில் உதவும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த பாகிஸ்தான் ரசிகர்கள் ஆதங்கம்.
    இந்தியா - இங்கிலாந்து இடையிலான ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா வெற்றி பெற்றால், பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருந்தது. இதனால் போட்டியின்போது பாகிஸ்தான் ரசிகர்களும் இந்தியாவுக்கு ஆதரவாக இருந்தனர்.

    இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்

    தொடரில் தோல்வியை சந்திக்காத அணியாக இந்தியா இருந்ததால், பாகிஸ்தான் ரசிகர்கள் எப்படியும் இந்தியா வெற்றி பெற்றுவிடும் என்ற நம்பினர். ஆனால் இந்தியா தோல்வியை சந்தித்தது. இதனால் ஆதங்கம் அடைந்த அவர்கள் இந்தியா - இங்கிலாந்து இடையிலான போட்டியில் மேட்ச்-பிக்சிங் நடந்துள்ளது என தங்களாக ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
    Next Story
    ×