என் மலர்

  செய்திகள்

  மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது: இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி
  X

  மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது: இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாட்டிங்காமில் நடைபெற இருந்த ஆட்டம் மழையால் கைவிடப்பட்டு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டன.
  இந்தியா - நியூசிலாந்து இடையிலான உலகக்கோப்பை லீக் ஆட்டம் நாட்டிங்காமில் இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நேற்றில் இருந்து நாட்டிங்காமில் கடும் மழை பெய்து வந்தது. இதனால் போட்டி நடக்குமா? என்ற சந்தேகம் எழும்பியது.

  போட்டிக்கான டாஸ் சரியாக 2.30 சுண்டப்படும். அப்போது மழை பெய்யவில்லை. ஆனால் மேகம் கருமையாக திரண்டு இருந்தது. இதனால் அரைமணி நேரம் கழித்து, சூழ்நிலையை பார்த்து டாஸ் சுண்டப்படும் என தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு அறிவித்த மறுநிமிடத்தில் இருந்து கனமழை பெய்யத் தொடங்கியது. இந்திய நேரப்படி போட்டி தொடங்கும் மதியம் 3 மணியில் இருந்து இரவு 7.40 மணி வரை மழை ஓயவில்லை.  இதனால் போட்டி கைவிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆகவே, நியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டன.
  Next Story
  ×