என் மலர்
உலகம்

பறக்கும் பைக்
அமெரிக்காவில் அறிமுகமாகிறது உலகின் முதல் பறக்கும் பைக்
- உலகின் முதல் பறக்கும் பைக் என்ற வாகனம் அமெரிக்காவில் அறிமுகமாகியுள்ளது.
- ஜப்பானைச் சேர்ந்த ஏர்வின்ஸ் நிறுவனம் இந்த பறக்கும் பைக்கை உருவாக்கி உள்ளது.
வாஷிங்டன்:
எரிபொருள் தேவையை மிச்சப்படுத்தும் வகையில் சூரிய சக்தி, மின்சக்தியில் ஓடும் வாகனங்கள், விபத்துக்களை தடுக்கும் வகையில் அதிநவீன சென்சார்கள், கேரமாக்களை கொண்ட தானியங்கி வாகனங்கள் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தற்போது எதிர்கால தொழில்நுட்பமாக உலகின் முதல் பறக்கும் பைக் என்ற வாகனம் அறிமுகமாகியுள்ளது.
டெட்ராய்டில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் இந்த பறக்கும் பைக் காட்சிப்படுத்தப்பட்டது. ஜப்பானைச் சேர்ந்த ஏர்வின்ஸ் நிறுவனம் இந்த பறக்கும் பைக்கை உருவாக்கி உள்ளது.
டிரோன் போன்ற வடிவமைப்பிலான பறக்கும் தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பைக் தொடர்ந்து 40 நிமிடங்கள் வரை பறக்கும் திறன் கொண்டது. இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் ரூ. 6 கோடி என தெரிவிக்கப்பட்டது.
Next Story






