என் மலர்
இந்தியா

ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடிய தென்கொரிய தூதர்- ஊழியர்கள்
- நாட்டு நாட்டு பாடலுக்கு இசையமைப்பாளர் கிரவாணிக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்தது.
- என்.டி.ஆர்., ராம்சரண் போல நடனமாடி அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண் நடிப்பில் வெளியான 'ஆர்ஆர்ஆர்' படம் சர்வதேச அளவில் பல விருதுகளை குவித்து வருகிறது. குறிப்பாக அந்த படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு இசையமைப்பாளர் கிரவாணிக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்தது.
தொடர்ந்து பல விருதுகளை குவித்து வரும் நிலையில் சர்வதேச பிரபலங்கள் பலரும் நாட்டு நாட்டு பாடலுக்கு ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண் போல நடனமாடி அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதுடெல்லியில் உள்ள தென்கொரிய தூதரகத்தில் ஊழியர்கள் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடும் வீடியோவை பகிர்ந்துள்ளனர். தென்கொரிய தூதர் சாங் ஜே-போக் மற்றும் தூதரக ஊழியர்கள் இணைந்து நடனமாடி உள்ள அந்த வீடியோ 53 விநாடிகள் ஓடுகிறது.
இந்த வீடியோ வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.






