என் மலர்
உலகம்

பாகிஸ்தானில் இருந்து ஊடுருவியவர் கைது
- சர்வதேச எல்லைப் பகுதியில் அவர் ஊடுருவுவதை பெரோஸ்பூர் செக்டாரில் இருந்து கண்காணித்த எல்லைப் பாதுகாப்பு படையினர் அவரை திரும்பி செல்ல எச்சரித்தனர்.
- முதல்கட்ட விசாரணையில் அவர் பாகிஸ்தானில் உள்ள கைபர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் மாநில எல்லை வழியாக மர்மமான முறையில் ஒரு நபர் இந்தியாவுக்குள் இன்று அதிகாலை ஊடுருவ முயற்சி செய்தார். சர்வதேச எல்லைப் பகுதியில் அவர் ஊடுருவுவதை பெரோஸ்பூர் செக்டாரில் இருந்து கண்காணித்த எல்லைப் பாதுகாப்பு படையினர் அவரை திரும்பி செல்ல எச்சரித்தனர். அந்த நபர் தொடர்ந்து முன்னேறி வந்ததால் அவரை கைது செய்தனர். முதல்கட்ட விசாரணையில் அவர் பாகிஸ்தானில் உள்ள கைபர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. அவரை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Next Story






