என் மலர்tooltip icon

    உலகம்

    துருக்கியில் இன்றும் அடுத்தடுத்து நிலநடுக்கம்- பலி எண்ணிக்கை 5 ஆயிரமாக உயர்வு
    X

    துருக்கியில் இன்றும் அடுத்தடுத்து நிலநடுக்கம்- பலி எண்ணிக்கை 5 ஆயிரமாக உயர்வு

    • முதலில் ரிக்டர் அளவில் 5.5 எனவும் இரண்டாவது முறையாக 5.7 எனவும் பதிவானது. இதனால், மக்கள் மேலும் பீதியில் உறைந்துள்ளனர்.
    • நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்ட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது.

    துருக்கி- சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் நேற்று அதிகாலை, முதலில் 7.8 ரிக்டர் அளவிலும், இரண்டாவதாக 7.5 ரிக்டர் அளவிலும், மூன்றாவது முறையாக 6.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவானது.

    இதில் கட்டிடங்கள் பல குலுங்கி, சரிந்து தரைமட்டமானது. இந்த இடிபாடுகளில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் தவித்து வருகின்றனர். ஆரம்பத்தில் 400 பேர் பலி என கூறி வந்த நிலையில், அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 4000 ஆனது.

    இந்நிலையில், இன்று காலை முதல் துருக்கியில் மீண்டும் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் ரிக்டர் அளவில் 5.5 எனவும் இரண்டாவது முறையாக 5.7 எனவும் பதிவானது. இதனால், மக்கள் மேலும் பீதியில் உறைந்துள்ளனர்.

    இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதில், இதுவரை 5000 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நிலநடுக்கத்தால், பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்ட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது.

    Next Story
    ×