என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம் (World)
விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்- பூமிக்கு திரும்பி வருவதில் சிக்கல்
- கடந்த 5-ந்தேதி சுனிதா வில்லியம்ஸ் மீண்டும் விண்வெளி பயணம் மேற்கொண்டார்.
- சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் விண்வெளிக்கு பயணித்தனர்.
நாசா:
இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். அமெரிக்க கடற்படை அகாடமியில் படித்த இவர், 1998-ம் ஆண்டு நாசா விண்வெளி பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து 2006 மற்றம் 2012-ம் ஆண்டுகளில் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
இதன்மூலம் அதிகநேரம், அதாவது 50 மணி நேரம் 40 நிமிடங்கள் விண்வெளியில் நடந்த இரண்டாவது பெண் என்ற பெருமையை பெற்றார். இந்நிலையில் கடந்த 5-ந்தேதி சுனிதா வில்லியம்ஸ் மீண்டும் விண்வெளி பயணம் மேற்கொண்டார்.
அவருடன் புட்ச் வில்மோர் என்பவருடன் விண்வெளி பயணம் மேற்கொண்டிருந்தார். இருவரும் அமெரிக்காவின் கேப் கனாவெரல் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர். அவர்கள் கடந்த 7-ந்தேதி சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தனர். இதன்மூலம் மூன்றாவது முறையாக விண்வெளி நிலையத்தை சுனிதா வில்லியம்ஸ் அடைந்தார்.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த 13-ந்தேதி பூமிக்கு திரும்பும் வகையில் பயண திட்டம் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் திரும்ப இருந்த பயணம் திடீரென 26-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பின்பு அந்த தேதியிலும் அவர்கள் புறப்படவில்லை. அவர்கள் இருந்த விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக அவர்கள் திரும்பி வருவதில் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விண்வெளி துறையில் தனியாரின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், ஸ்பேஸ் ஷிப்பை தயாரித்திருக்கிறது.
'ஸ்டார் லைனர்' என்றுபெயரிடப்பட்ட இந்த ஸ்பேஸ் ஷிப் சர்வதேச விண்வெளி மையத்திற்கு விண்வெளி வீரர்களை அழைத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்பு வரை இந்த பணிகளை நாசா தான் மேற்கொண்டு வந்தது. ஆனால் விண்வெளி துறையில் தனியாரை ஊக்குவிக்கும் விதமாக போயிங் நிறுவனத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
போயிங் நிறுவனம் ஏற்கனவே எலான் மஸ்க்கின்ஸ் ஸ்பேஸ் ஷிப்களை வடிவமைத்திருக்கிறது. எனவே போயிங் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி 'ஸ்டார் லைனர்' என்கிற ஸ்பேஸ ஷிப்பை வடிவமைத்தது. அதிலேயே சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் விண்வெளிக்கு பயணித்தனர்.
இந்த பயணத்தை தொடங்குவதற்கு முன்னரே பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விண்வெளிக்கு சென்ற நிலையில் விண்கலத்தில் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. போயிங் 'ஸ்டார் லைனர்' விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு ஏற்பட்டிருக்கிறது. 5 முறை கசிவு ஏற்பட்டதன் காரணமாக விண்கலத்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் திரும்பி வருவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. விண்கலத்தில் உள்ள 28 த்ரஸ்டர்களில் பழுதடைந்த 14 த்ரஸ்டர்களை மீட்டெக்க வேண்டும். 'ஸ்டார் லைனர்' விண்கலத்தில் 45 நாட்கள் வரை தங்கியிருக்க முடியும், அதே நேரத்தில் பல்வேறு காப்பு பிரதி அமைப்புகளால் 75 நாட்கள் வரை இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த விவகாரத்தில் சிக்கலை சரிசெய்து சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்கு விண்கலம் திருப்பி அனுப்பப்படும் என்று நாசா நம்புகிறது. 'ஸ்டார் லைனர்' விண்கலம் மூலம் பத்திரமா திரும்ப முடியாவிட்டால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரையும் காப்பாற்ற 'எலான் மஸ்க்' கேட்கப்படலாம் என்று தெரிகிறது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்பும் திட்டம் நேற்று இரவு இருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில், அதுவும் கைவிடப்பட்டது. அது ஜூலை 2-ந்தேதிக்கு மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்