என் மலர்
உலகம்

பங்குச் சந்தையில் தொடர்ந்து 3-வது நாளாக கரடி ஆதிக்கம்., சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு
- இந்தியாவின் பண மதிப்பு வீழ்ச்சி முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.
- கச்சா எண்ணெய் விலை உயர்வும் முக்கிய காரணம்.
அமெரிக்கா- இஸ்ரேல் போர் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை காரணமாக இந்திய பங்குச் சந்தை குறியீடு நிஃப்டி, மும்பை பங்குச் சந்தை குறியீடு சென்செக்ஸ் ஆகியவை வீழ்ச்சி கண்டு வருகின்றன. கடந்த இரண்டு நாட்களாக கடும் வீழ்ச்சியை சந்தித்த நிலையில், இன்று 3-வது நாளாகவும் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இந்திய பண மதிப்பு வீழ்ச்சி
குளோபல் மார்க்கெட்டில் பங்குகளை அதிகமாக விற்றல், வெளிநாட்டு நிதி வெளியேறுதல், பண மதிப்பு வீழ்ச்சி ஆகியவை பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீடு சென்செக்ஸ் அதிகபட்சமாக 1579.82 புள்ளிகள் சரிந்தது. இது 2 சதவீதம் ஆகும். பின்னர் வர்த்தக முடிவில் 1470.50 புள்ளிகள் சரிந்து 74,563.92 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இது 1.93 சதவீதம் ஆகும்.
அதேபோல் இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 488.05 புள்ளிகள் (2.06 சதவீதம்) குறைந்து 23151.10 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
சரிவை சந்தித்த பங்குகள்
சென்செக்ஸில் லார்சன் அண்டு டூர்போ, டாடா ஸ்டீல், எஸ்.பி.ஐ, பாரத் எலக்ட்ரானிக்ஸ், மாருதி, அல்ட்ராடெக் சிமெண்டு நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.
ஏற்றம் கண்ட பங்குகள்
இந்துஸ்தான் யுனிலிவர், பாரதி ஏர்டெல் பங்குகள் ஏற்றம் கண்டன.
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 0.25 சதவீதம் உயர்ந்து 100.7 அமெரிக்க டாலருக்கு விற்பனையாகிறது.
ஆசிய பங்குச் சந்தைகள்
தென்கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நக்கெய் 225 இண்டெக்ஸ், ஷாங்காயின் எஸ்எஸ்இ, ஹாங்காங்கியன் ஹாஙட் செங் இண்டெக்ஸ் ஆகியவையும் சரிவை சந்தித்தது.
வியாழக்கிழமை அமெரிக்க வர்த்தகம் குறிப்பிடத்தகுந்த வகையில் சரிவ சந்தித்தன.
நேற்று மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 829.29 புள்ளிகளும் (1.08 சதவீதம்), நிஃப்டி 227.70 (0.95 சதவீதம்) வீழ்ச்சியை சந்தித்தன.






