என் மலர்tooltip icon

    உலகம்

    ராணுவ சட்டம் அமல் விவகாரம் - தென்கொரிய முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை
    X

    ராணுவ சட்டம் அமல் விவகாரம் - தென்கொரிய முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை

    • ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக கூறி சட்டத்தை கொண்டு வந்தார்.
    • பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் சில மணி நேரங்களிலேயே ராணுவ சட்டத்தை திரும்ப பெற்றார்.

    தென்கொரியாவில் கடந்த 2024-ம் ஆண்டு அப்போதைய அதிபர் யூன் சுக் யோல் திடீரென்று ராணுவ சட்டத்தை பிரகடனப்படுத்தினார். ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக கூறி இச்சட்டத்தை கொண்டு வந்தார்.

    இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் சில மணி நேரங்களிலேயே ராணுவ சட்டத்தை திரும்ப பெற்றார். இவ்விவகாரத்தால் யூன் சுக் யோல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் மீது கிளர்ச்சியை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் ராணுவ சட்டம் அமல்படுத்தியது தொடர்பாக யூன் சுக் யோலுக்கு எதிரான சில குற்றச்சாட்டுகளில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையை கோர்ட்டு விதித்து உள்ளது. அதிகாரிகள் கைது செய்ய வந்தபோது அவர்களின் முயற்சிகளை மீறியது போன்ற பிற குற்றச்சாட்டுகளுக்காக யூன் சுக் யோலுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் மீதான 8 குற்றவியல் வழக்குகளில் இது முதல் தீர்ப்பு ஆகும்.

    Next Story
    ×