என் மலர்tooltip icon

    உலகம்

    பதான்கோட் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை
    X

    பதான்கோட் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை

    • பதான்கோட் தாக்குதல் கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது.
    • இதில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 7 வீரர்கள் உயிரிழந்தனர்.

    லாகூர்:

    பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர்களில் ஒருவன் ஷஹித் லத்தீப். 2016-ம் ஆண்டு இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டான். இவன், பாகிஸ்தான் சியால் கோட்டில் இருந்து தாக்குதலை ஒருங்கிணைத்து 4 பயங்கரவாதிகளை பதான்கோட்டுக்கு அனுப்பி வைத்தான். இதையடுத்து பயங்கரவாதி ஷஹித் லத்தீப்பை இந்தியா தேடி வந்தது.

    இந்நிலையில், பாகிஸ்தானின் சியோல்கோட்டில் பயங்கரவாதி ஷஹித் லத்தீப் இன்று மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டான். அவனை சுட்டுக் கொன்றது யார் என்பது தெரியவில்லை.

    ஷஹித் லத்தீப், கடந்த 1994-ம் ஆண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் இந்தியாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். சிறை தண்டனை முடிந்த பிறகு 2010-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டான். 1999-ம் ஆண்டு இந்திய விமானத்தை பயங்கரவாதிகள் கடத்திய வழக்கில் லத்தீப் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

    Next Story
    ×