search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இஸ்ரேல் சிறையில் இருந்து விடுதலை: ஆனந்த கண்ணீர், வாணவேடிக்கையுடன் வரவேற்ற பாலஸ்தீனர்கள்
    X

    இஸ்ரேல் சிறையில் இருந்து விடுதலை: ஆனந்த கண்ணீர், வாணவேடிக்கையுடன் வரவேற்ற பாலஸ்தீனர்கள்

    • 50 பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பினர் ஒப்புதல்.
    • பதிலுக்கு இஸ்ரேல் சிறையில் உள்ள 150 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட இருக்கிறார்கள்.

    ஹமாஸ்- இஸ்ரேல் இடையில் நான்கு நாட்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த நான்கு நாட்களில் ஹமாஸ் பிடித்து வைத்திருக்கும் பிணைக்கைதிகளில் 50 பேர் விடுதலை செய்ய வேண்டும். அதேவேளையில் இஸ்ரேல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 150 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். இதுதொடர்பாக ஹமாஸ்- இஸ்ரேல் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாக போர் நிறுத்தம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து நேற்று தாய்லாந்தை சேர்ந்த 12 பேர், இஸ்ரேலைச் சேர்ந்த 13 பேர் என 25 பேரை ஹமாஸ் அமைப்பினர் விடுதலை செய்தனர்.

    அதேவேளையில் இஸ்ரேல் சிறையில் உள்ள 39 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதில் 25 பேர் பெண்கள், 14 பேர் இளைஞர்கள். கத்திக்குத்து, இஸ்ரேல் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் ஆகிய குற்றத்திற்காக 25 பெண்களும் கைது செய்யப்பட்டவர்கள். இளைஞர்கள் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டவர்கள்.

    33 பேர் மேற்கு கரையில் உள்ள சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 6 பேர் ஜெருசலேமில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் குழு தெரிவித்துள்ளது.

    விடுதலை செய்யப்பட்டதும் சிறையில் இருந்து வெளியே வந்த பெண்களை தங்களது குடும்பத்தினருடன் இணைந்தனர். அப்போது, ஆனந்த கண்ணீருடன் அவர்களை வரவேற்றனர். இளைஞர்களை தோளில் தூக்கி சந்தோசத்தை வெளிப்படுத்தினர். தெருக்களில் ஆயிரக்கணக்கானோர் கூடி வாணவேடிக்கை நிகழ்த்தி சந்தோசத்தை வெளிப்படுத்தினர். அப்போது பலர் தங்களது கைகளில் பாலஸ்தீன கொடிகளையும், சிலர் ஹமாஸ் கொடியையும் வைத்திருந்தனர்.

    இஸ்ரேல் சிறையில் இருந்து மொத்தம் 150 பேர் விடுதலை செய்யப்பட இருக்கிறார்கள். 250 பிணைக்கைதிகளை ஹமாஸ் ரிலீஸ செய்யும்போது சுமார் ஆயிரம் பேர் இஸ்ரேல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

    பிணைக்கைதிகள்- கைதிகள் பரிமாற்றத்தில் கத்தார் முக்கிய பங்குவகித்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×