என் மலர்
உலகம்

ரிக்டர் அளவில் 7 ஆக பதிவு: அமெரிக்காவின் அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
- சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள் பயங்கரமாக குலுங்கின.
- பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டபோதிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
அமெரிக்காவின் அலாஸ்கா-கனடா எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அலாஸ்காவின் ஜூனாவ் வில் இருந்து வடமேற்கே சுமார் 370 கிலோமீட்டர் தொலைவிலும், கனடாவின் யூகோனின் வைட்ஹார்சுக்கு மேற்கே 250 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது ரிக்டர் அளவில் 7 ஆக பதிவானது. 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் அலாஸ்கா வின் யாகுடாட், ஜூனாவ் ஆகிய இடங்களில் உணரப்பட்டது.
சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள் பயங்கரமாக குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டபோதிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.






