என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
சிங்கப்பூரின் 4-வது பிரதமராக லாரன்ஸ் வோங்க் பொறுப்பேற்றார்
Byமாலை மலர்16 May 2024 7:23 AM IST
- சிங்கப்பூரின் 4-வது பிரதமராக பொருளாதார நிபுணர் லாரன்ஸ் வோங் பதவியேற்றார்.
- லீ சியோன் லூங் கடந்த 20 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்தார்.
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் பிரதமராக பதவி வகித்தவர் லீ சியோன் லூங். இவர் 2004-ம் ஆண்டு முதல் பொறுப்பேற்று வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் பதவி விலகினார். அவர் வகித்து வந்த பொறுப்புகள் அனைத்தையும் துணை பிரதமரும், நிதி மந்திரியுமான லாரன்ஸ் வோங்கிடம் ஒப்படைப்பதற்கு அந்நாட்டு அதிபர் சண்முகரத்தினம் பரிந்துரை செய்தார்.
இதற்கிடையே, சிங்கப்பூர் நிதி மந்திரியான லாரன்ஸ் வோங்க் அடுத்த பிரதமராக மே 15-ம் தேதி பொறுப்பேற்பார் என அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், சிங்கப்பூரின் 4வது பிரதமராக லாரன்ஸ் வோங்க் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அந்நாட்டு அதிபர் தர்மன் சண்முகரத்தினம் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இவர் சிங்கப்பூரின் பிரதமராகவும், நிதி மந்திரியாகவும் பதவி வகிக்க உள்ளார்.
Next Story
×