என் மலர்tooltip icon

    உலகம்

    சீனப் பொருளாதாரத்தை இந்தியா விஞ்சும் - சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ சியன் லூங் கணிப்பு
    X

    சீனப் பொருளாதாரத்தை இந்தியா விஞ்சும் - சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ சியன் லூங் கணிப்பு

    • உலக பொருளாதாரத்தில் இந்தியா தற்போது 4-வது இடத்தில் இருக்கிறது.
    • 2030-ம் ஆண்டுக்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்தை பிடிக்கும்

    உலக பொருளாதாரத்தில் அமெரிக்கா முதல் இடத்திலும், சீனா 2-வது இடத்திலும் இருக்கிறது. ஜப்பான் 3-வது இடத்திலும் உள்ளது இந்தியா தற்போது 4-வது இடத்தில் இருக்கிறது.

    2030-ம் ஆண்டுக்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இந்தியா ஒருநாள் சீனப் பொருளாதாரத்தை எட்டிவிடும் என்று சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ சியன் லூங் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய லீ சியன் லூங், " இந்தியா ஒருநாள் சீனப் பொருளாதாரத்தை எட்டிவிடும். ஏன் அதை விஞ்சும் அளவுக்கும் வாய்ப்புள்ளதாக கணிப்புகள் கூறுகின்றன. சீனாவின் மக்கள்தொகை ஏற்கனவே சுருங்கி வருகிறது. இந்தியா இன்னும் இளம் மக்கள்தொகையை கொண்டுள்ளது" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×