search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அமெரிக்க விமானப்படையில் இந்திய விண்வெளி வீரர் ராஜா சாரிக்கு முக்கிய பதவி
    X

    அமெரிக்க விமானப்படையில் இந்திய விண்வெளி வீரர் ராஜா சாரிக்கு முக்கிய பதவி

    • பிரிகேடியர் ஜெனரல் என்பது அமெரிக்க விமானப்படையின் ஒரு நட்சத்திர ஜெனரல் அதிகாரி பதவி ஆகும்.
    • இவரது நியமனத்துக்கு அமெரிக்க நாடாளுமன்ற செனட்சபை ஒப்புதல் வழங்க வேண்டும்.

    வாஷிங்டன் :

    அமெரிக்க விமானப்படையின் பிரிகேடியர் ஜெனரலாக இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீரர் ராஜா சாரியை ஜனாதிபதி ஜோ பைடன் நியமித்துள்ளார். பிரிகேடியர் ஜெனரல் என்பது அமெரிக்க விமானப்படையின் ஒரு நட்சத்திர ஜெனரல் அதிகாரி பதவி ஆகும். இவரது நியமனத்துக்கு அமெரிக்க நாடாளுமன்ற செனட்சபை ஒப்புதல் வழங்க வேண்டும்.

    45 வயதான ராஜா சாரி தற்போது அமெரிக்கா விண்வெளி நிறுவனமான நாசாவின் 'க்ரூ-3' விண்வெளி திட்டத்தின் தலைவராக உள்ளார். 'க்ரூ-3' என்பது சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டமாகும்.

    அமெரிக்க விமானப்படையில் கர்னலாக இருந்த ராஜா சாரி, 461-வது விமானப்படை குழுவின் கட்டளை அதிகாரியாகயும், அமெரிக்காவின் முக்கிய போர் விமானங்களில் ஒன்றான எப் 35-ன் ஒருங்கிணைந்த பரிசோதனைப் பிரிவின் இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.

    ராஜா சாரி நாசாவின் ஆர்டெமிஸ் திட்டத்தின் கீழ் நிலவுக்குப் பயணிக்கும் விண்வெளி வீரர்களில் ஒருவராக தேர்வாகி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×