search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கனடா குடிமக்களுக்கு விசா - இந்தியா புது முடிவு
    X

    கனடா குடிமக்களுக்கு விசா - இந்தியா புது முடிவு

    • கனடா பிரதமர் ட்ரூடோ இந்தியா மீது பகிரங்கமாக குற்றம் சாட்டினார்
    • செப்டம்பர் 21ல், இந்தியா, கனடா குடிமக்களுக்கு விசா வழங்குதலை தடை செய்தது

    கடந்த ஜூன் மாதம், கனடாவின் மேற்கு பகுதியில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் இந்தியாவை சேர்ந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்திப்சிங் நிஜ்ஜார் சுட்டு கொல்லப்பட்டார்.

    இதையடுத்து, இந்த கொலையில் இந்திய அரசின் உளவு அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) குற்றம் சாட்டினார். ஆனால், இந்த குற்றச்சாட்டை இந்திய அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்தது. இதனை தொடர்ந்து இரு தரப்பு உறவுகள் நலிவடைய தொடங்கியது.

    அதன் தொடர்ச்சியாக இந்தியா, கனடாவிலிருந்து இந்தியாவிற்கு வர விரும்புபவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த "விசா" (visa) எனப்படும் நாட்டிற்குல் நுழையும் அனுமதியை நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்வதாக கூறி, கடந்த செப்டம்பர் 21 அன்று ரத்து செய்தது.

    இந்நிலையில் இன்று, இந்தியாவிற்கு வர விரும்பும் கனடா குடிமக்களுக்கு அனுமதி வழங்கும் எலக்ட்ரானிக் விசா (e-visa) எனப்படும் இணையவழி அனுமதி வழங்கல் முறையை இந்தியா மீண்டும் தொடங்கியுள்ளது.

    கிட்டத்தட்ட 2 மாதங்களாக தடை செய்யப்பட்டிருந்த அனுமதி மீண்டும் தொடங்கப்பட்டிருப்பது இரு நாடுகளுக்கு இடையே பயணம் செய்பவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×