என் மலர்
உலகம்

சீனாவின் முன்னாள் பாதுகாப்பு மந்திரி கட்சியில் இருந்து நீக்கம்: ஊழல் குறித்து விசாரணை
- கடந்த ஆண்டு இரண்டு மாதங்களாக திடீரென மாயமானார்.
- மக்கள் பார்வையில் தென்படாத நிலையில், பாதுகாப்பு மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
சீனாவின் முன்னாள் பாதுகாப்பு மந்திரி லி ஷாங்க்ஃபு. இவர் கடந்த ஆண்டு திடீரென மாயமானார். இரண்டு மாதங்களுக்கு மேலாக மக்கள் பார்வையில் தென்படாத நிலயைில், பாதுகாப்பு மந்திரி பதவியில் இருந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் லி ஷாங்க்ஃபு நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது. அவர் மீது ஊழல் மற்றும் லஞ்சம் குற்றச்சாட்டு உள்ள நிலையில், அது தொடர்பாக விசாரணை நடைபெற்ற வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story






