என் மலர்tooltip icon

    உலகம்

    வாலிபரின் வயிற்றுக்குள் ஓட்கா பாட்டில்... ஆபரேசன் மூலம் அகற்றிய டாக்டர்கள்... பகீர் பின்னணி
    X

    வாலிபரின் வயிற்றுக்குள் ஓட்கா பாட்டில்... ஆபரேசன் மூலம் அகற்றிய டாக்டர்கள்... பகீர் பின்னணி

    • கடந்த சில தினங்களாக கடுமையாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
    • அந்த பாட்டில் அவரது குடலில் காயத்தை ஏற்படுத்தியதுடன், மலக் கசிவும் ஏற்பட்டுள்ளது.

    காத்மாண்டு:

    நேபாளத்தில் வாலிபர் ஒருவரின் வயிற்றில் இருந்து ஓட்கா பாட்டிலை டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றிய நிலையில், இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    நேபாளத்தின் ரவுதஹத் மாவட்டம், குஜாரா நகரில் வசித்து வரும் நூர்சாத் மன்சூரி என்ற 26 வயது வாலிபர், கடந்த சில தினங்களாக கடுமையாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அடிவயிற்றில் தாங்க முடியாத வலி ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவரது அடிவயிற்றில் ஒரு ஓட்கா மது பாட்டில் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஆபரேசன் மூலம் அந்த பாட்டிலை டாக்டர்கள் அகற்றினர்.

    கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு அவருக்கு ஆபரேசன் நடந்ததாகவும், இரண்டரை மணி நேரம் நடந்த இந்த ஆபரேசனில் பாட்டில் வெளியே எடுக்கப்பட்டதாகவும் ஹிமாலயன் டைம்ஸ் செய்தி வெளியட்டுள்ளது.

    அந்த பாட்டில் அவரது குடலில் காயத்தை ஏற்படுத்தி குடலில் வீக்கம் ஏற்பட்டதுடன், மலக் கசிவும் ஏற்பட்டுள்ளது. ஆனால், பாட்டிலை அகற்றியதால் அவர் அபாயகட்டத்தில் இருந்து மீண்டுள்ளதாக டாக்டர் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது நண்பர்களில் ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் சில நண்பர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

    நண்பர்கள் சேர்ந்து மது அருந்தியபோது, போதையில் நூர்சாத்தின் ஆசனவாய் வழியாக பாட்டிலை வயிற்றுக்குள் செருகியிருக்கலாம், பாட்டில் உடையாமல் இருந்ததால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×