என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம் (World)
இலங்கையில் பட்டாம்பூச்சி திருடர்களுக்கு ரூ.1½ கோடி அபராதம்
- பட்டாம்பூச்சிகளை கொன்று கெமிக்கல் மூலம் பதப்படுத்தி தங்கள் நாட்டிற்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தனர்.
- விசாரணையில் 300-க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகளை அவர்கள் கொன்று பதப்படுத்த முயன்றது தெரிய வந்தது.
கொழும்பு:
இத்தாலியை சேர்ந்த லூகி பெராரி என்பவர் தனது 28 வயது மகனுடன் இலங்கையை சுற்றி பார்க்க வந்தார். தென்கிழக்கு இலங்கையில் உள்ள பிரபல யாலா தேசிய பூங்காவை அவர்கள் சுற்றி பார்த்து கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள பட்டாம்பூச்சிகளை அவர்கள் கண்ணாடி குடுவைக்குள் அடைத்து வந்து சேகரித்தனர்.
பின்னர் அவற்றை கொன்று கெமிக்கல் மூலம் பதப்படுத்தி தங்கள் நாட்டிற்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தனர். அப்போது அங்குள்ள வனகாப்பாளர்களால் கையும், களவுமாக பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுகுறித்தான வழக்கு கொழும்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. விசாரணையில் 300-க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகளை அவர்கள் கொன்று பதப்படுத்த முயன்றது தெரிய வந்தது. இதனையடுத்து தந்தை-மகன் இருவருக்கும் சுமார் ரூ.1½ கோடி அபராதமும் (2 லட்சம் அமெரிக்க டாலர்கள்) கட்டத்தவறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியது.