என் மலர்
உலகம்

ஏடன் வளைகுடாவில் தீப்பற்றி எரியும் கப்பல்: ஹவுதி காரணமா?
- செங்கடல் வழியாக செல்லும் கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல் நடத்தி வந்தது.
- 4 கப்பல்களை தாக்கி மூழ்கடித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனால் செங்கடல் வழியாக (Corridor) செல்லும் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளின் கப்பல்கள் மீது ஹவுதி குழு தாக்குதல் நடத்தி வந்தது.
சமீப காலமாக ஹவுதி தனது தாக்குதலை நிறுத்தி வைத்திருந்தது. இந்த நிலையில் ஏமனில் இருந்து வெகுதூரத்தில் உள்ள ஏடன் வளைகுடாவில் கப்பல் ஒன்று தீப்பற்றி எரிந்து வருவதாக பிரிட்டிஷ் ராணுவத்தின் இங்கிலாந்து கடல்சார் வர்த்தக செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
தீப்பற்றி எரியும் கப்பலை, மாலுமிகள் கைவிட்டு வெளியேற தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story






