என் மலர்
உலகம்

சிரியாவில் ஐ.எஸ். அமைப்பு ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்த இடங்கள் மீது விமான தாக்குதல் நடத்திய இங்கிலாந்து, பிரான்ஸ்
- சிரியாவில் ஐ.எஸ். சிலிப்பர் செல்கள் அடிக்கடி கொடூரமான தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
- அவர்களை வேட்டையாடும் பணியில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை செயல்பட்டு வருகிறது.
சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத குழு ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்த இடங்கள் மீது பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.
சிரியாவின் ஹொம்ஸ் மாகாணத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பால்மைரா நகருக்கு சற்றே வடக்குப் பகுதியில் உள்ள மலைப்பகுதிகளில் சுரங்கங்கள் அமைத்து ஐ.எஸ். அமைப்பினர் ஆயுதங்கள் பதுக்கி வைத்துள்ளனர். இந்த இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சிரியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஐ.எஸ். பயங்கரவாத குழுவிற்கு எதிராக இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையுடன் இணைந்து போரிட்டு வருகிறது.
இங்கிலாந்து ராணுவம் தைபூன் FGR4 என போர் விமானத்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் குறித்து சிரியா அரசு கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஐ.எஸ்.க்கு எதிரான படையுடன் சிரியா கடந்த வருடம் இணைந்தது.
சிரியாவில் இருந்து 2019-ல் ஐ.எஸ். ஒழிக்கப்பட்ட போதிலும், ஐ.எஸ். சிலிப்பர் செல்கள் அடிக்கடி சிரியா மற்றும் ஈராக்கில் மோசமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.






