என் மலர்
உலகம்

2 கருப்பைகள் கொண்ட பெண்: இரண்டிலும் கர்ப்பம் தரித்த அதிசயம்
- கெல்சி ஹேட்சர் மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.
- 2 கருப்பையிலும் தனித்தனி குழந்தைகளை கெல்சி ஹேட்சர் சுமந்து கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தை சேர்ந்தவர் கெல்சி ஹேட்சர். 32 வயதான இவர் 2 கருப்பைகள் கொண்ட பெண்ணாக இருக்கிறார். பிறப்பிலேயே அரிய கருப்பை கொண்ட இவருக்கு காலேப் என்ற கணவரும், 3 குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் கெல்சி ஹேட்சர் மீண்டும் கர்ப்பம் அடைந்தார். அதிசயமாக அவரது 2 கருப்பையிலும் தனித்தனி குழந்தைகளை அவர் சுமந்து கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது மருத்துவ வரலாற்றில் அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இதை கடவுளின் ஆசீர்வாதமாக கெல்சி மற்றும் அவரது கணவர் கருதுகின்றனர். ஒவ்வொரு கருப்பையும் வெவ்வேறு நேரங்களில் சுருங்க கூடும் என்பதால் குழந்தைகள் மணி நேரம், நாட்கள் அல்லது வாரங்கள் இடைவெளியில் பிறக்கலாம் என்று மருத்துவர்கள் நம்புகிறார்கள்.
Next Story






