search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    கண்ணிவெடியை அகற்றும் பணியில் உக்ரைன் அதிகாரிகள்
    X
    கண்ணிவெடியை அகற்றும் பணியில் உக்ரைன் அதிகாரிகள்

    கார்கிவில் கண்ணிவெடிகளை அகற்றத் தொடங்கிய உக்ரைன் அதிகாரிகள்

    கண்ணிவெடி அகற்றும் குழுக்கள், சுற்றி வளைக்கப்பட்ட கார்கிவ் பகுதியை மக்கள் நெருங்க வேண்டாம் என்று ஒலிபெருக்கிகள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    உக்ரைன் மீது ரஷியா 48-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கிவ், கார்சன் உள்பட பல்வேறு நகரங்களில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

    ரஷிய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளன.  

    இந்நிலையில், உக்ரைனின் வடகிழக்கு எல்லைக்கு அருகில் உள்ள கார்கிவ் மீது பல வாரங்களாக ரஷிய படைகள் பாராசூட் மூலம் குண்டுகளை வீசி வருவதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். நேற்று அதிகாலை முதல் சாதனங்கள் கைவிடப்பட்டதாக குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து, உக்ரைனிய பாதுகாப்பு படையினர் கார்கிவ் நகரை சுற்றி வளைத்து, தெருக்களில் சிதறிக் கிடந்த சாதனங்களை அகற்றி வருகின்றனர்.

    இதுகுறித்து உக்ரைனின் மாநில அவசர சேவையின் கண்ணிவெடி அகற்றும் பிரிவின் தலைவரான லெப்டினன்ட கர்னல் நிகோலாய் ஓவ்சாருக் கூறியதாவது:-

    இந்த சாதனங்கள் பிளாஸ்டிக் பிடிஎம்-1எம் சுரங்கங்களாக கருதப்படுகிறது. அவை டைமர்களைப் பயன்படுத்தி வெடிக்கும். இந்த வெடி ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகளால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன.

    கண்ணிவெடி அகற்றும் குழுக்கள் சுற்றி வளைக்கப்பட்ட கார்கிவ் பகுதியை மக்கள் நெருங்க வேண்டாம் என்று ஒலிபெருக்கிகள் மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிடிஎம்-1 எம் கண்ணி வெடிகள் போன்ற சிதறக்கூடிய கண்ணிவெடிகளால், பொதுமக்கள் உயிரிழக்கும் அபாயம் இருப்பதால் ஒட்டாவா ஒப்பந்தத்தின்படி கண்ணிவெடிகள் தடை செய்யப்பட்டுள்ளது.  

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்.. வங்கி கடன் மோசடி- நிரவ் மோடி கூட்டாளி எகிப்து நாட்டில் கைது
    Next Story
    ×