search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஜெய்சங்கர்- பசில் ராஜபக்சே
    X
    ஜெய்சங்கர்- பசில் ராஜபக்சே

    இந்தியாவிடம் மேலும் ரூ.7,600 கோடி கடன் கேட்கும் இலங்கை

    இலங்கை அதிபருடனான சந்திப்பின்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டு வர இந்தியாவின் உதவிகள் தொடரும் என்று ஜெய்சங்கர் உறுதி அளித்தார்.
    கொழும்பு:

    இலங்கை நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி திணறி வருகிறது. உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியாவிடம் இலங்கை கடன் கோரியது.

    இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்சே இந்தியா வந்து பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதையடுத்து இலங்கைக்கு ரூ.7,600 கோடி கடன் உதவி அளிப்பதாக இந்தியா அறிவித்தது. இதற்கிடையே இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், இலங்கைக்கு சென்றுள்ளார்.

    இரு நாடுகள் உறவு குறித்து ஆலோசிக்கவும், இந்தியா, இலங்கை, வங்காளதேசம், மியான்மர், தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ள பிம்ஸ்டெக் அமைப்பின் உச்சி மாநாட் டில் பங்கேற்கவும் இலங்கை சென்றுள்ளார்.

    இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே, நிதியமைச்சர் பசில் ராஜ பக்சே ஆகியோரை மத்திய வெளியறவு மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.

    இலங்கை அதிபருடனான சந்திப்பின்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டு வர இந்தியாவின் உதவிகள் தொடரும் என்று ஜெய்சங்கர் உறுதி அளித்தார்.

    இந்த நிலையில், இலங்கையின் முக்கிய தலைவர்களுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பின்போது இந்தியாவிடம் மேலும் ரூ.7,600 கோடி கடனை இலங்கை கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அதனை இலங்கை தரப்பிலும் உறுதிப்படுத்தவில்லை.
    Next Story
    ×