search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஐ.நா. கூட்டம்
    X
    ஐ.நா. கூட்டம்

    உக்ரைனில் மனிதாபிமான நெருக்கடி- ரஷியாவுக்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம்

    சர்வதேசே சமூகம் ஐரோப்பாவில் பல தசாப்தங்களாக காணாத அளவில் நிலைமை மோசமாக இருப்பதாக தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.
    நியூயார்க்:

    உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில், ரஷியா போரை நிறுத்த வேண்டும் என பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் ரஷியா தனது நிலையில் இருந்து பின்வாங்காமல் உக்ரைனில் பேரழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். குடியிருப்புகள் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். போர் நடைபெறும் பகுதிகளில் மனிதாபிமான உதவிகள் செய்ய முடியாத அளவுக்கு சில பகுதிகளில் நிலைமை மோசமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், ரஷியாவுக்கு எதிராக ஐ.நா. பொது சபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ரஷியாவின் ஆக்கிரமிப்பால் உக்ரைனில் நிலவும் மோசமான மனிதாபிமான விளைவுகளுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், சர்வதேசே சமூகம் ஐரோப்பாவில் பல தசாப்தங்களாக காணாத அளவில் நிலைமை மோசமாக இருப்பதாகவும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது. மேலும், ரஷியாவின் ஷெல் தாக்குதல்கள், வான்வழித் தாக்குதல்கள் மற்றும் மரியுபோல் உள்ளிட்ட மக்கள் அதிகம் வசிக்கும் நகரங்களை முற்றுகையிடுவதை கண்டிப்பதுடன், உடனடியாக போர் நிறுத்தம் செய்து, மனிதாபிமான உதவிகள் தடையின்றி சென்றடைய அனுமதிக்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.

    இந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, 140-5 என்ற வாக்குகள் அடிப்படையில் தீர்மானம் வெற்றி பெற்றது. ரஷியாவுடன் இணைந்து பெலாரஸ், சிரியா, வட கொரியா, எரித்ரியா ஆகிய நாடுகள் மட்டுமே தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. சீனா உள்ளிட்ட 38 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 
    Next Story
    ×