என் மலர்
உலகம்

நிலச்சரிவு ஏற்பட்டதை படத்தில் காணலாம்.
பிரேசிலில் கனமழை- வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 94 பேர் பலி
பிரேசிலில் பெய்து வரும் பலத்த மழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 94 பேர் பலியாகியுள்ளனர்.
பிரேசில் நாட்டில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. ரியோ டிஜெனிரோ மாகாணத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஒரே நாளில் மிகப்பெரிய மழை கொட்டியதால் ஆறுகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் ஊர்களுக்குள்ள தண்ணீர் புகுந்தது. மேலும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் மண்ணில் புதைந்தனர். மீட்பு பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. முதல் கட்ட தகவலில் 54 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்பு பணியில் பல உடல்கள் மீட்கப்பட்டன. வெள்ளம்-நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 94 ஆக உயர்ந்தது.
இதையும் படியுங்கள்... ‘ஒயின்’ பருகுவது கொரோனாவில் இருந்து காக்கும்: புதிய ஆய்வில் தகவல்
Next Story