என் மலர்
செய்திகள்

ஜோ பைடன், கமலா ஹாரிஸ்
கமலா ஹாரிசிடம் தற்காலிகமாக அதிகாரத்தை ஒப்படைக்கிறார் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது என வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபராக பதவி வகித்து வருபவர் ஜோ பைடன். இவருக்கு வழக்கமான உடல் பரிசோதனையின் ஒரு பகுதியாக கொலோனோஸ்கோபி எனப்படும் பெருங்குடல் பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதற்காக அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்படும்.
இந்நிலையில், அதிபருக்கான அதிகாரத்தை குறுகிய நேரத்திற்கு மட்டும் துணை அதிபர் கமலா ஹாரிசிடம் அதிபர் ஜோ பைடன் ஒப்படைக்க உள்ளார் என்ற தகவலை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.
இதையும் படியுங்கள்...மீண்டும் அதிகரிக்கும் கொரோனா... ஆஸ்திரியாவில் முழு ஊரடங்கு அறிவிப்பு
Next Story






