என் மலர்

  செய்திகள்

  ஜப்பான் இளவரசி மகோ கணவருடன் சென்ற காட்சி
  X
  ஜப்பான் இளவரசி மகோ கணவருடன் சென்ற காட்சி

  காதல் திருமணம் செய்த ஜப்பான் முன்னாள் இளவரசி, கணவருடன் அமெரிக்கா சென்றார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரச குடும்பத்தை துறந்து, தனது காதலர் கீ கொமுரோவை திருமணம் செய்த ஜப்பான் முன்னாள் இளவரசியான மாகோ அமெரிக்காவில் குடியேறக்கூடும் என வதந்திகள் உலா வந்தன. அவை உண்மைதான் என்பது இப்போது நிரூபணமாகி உள்ளது.
  டோக்கியோ :

  ஜப்பான் இளவரசியான மாகோ சில தினங்களுக்கு முன்னர் அரச குடும்பத்தை துறந்து, தனது காதலர் கீ கொமுரோவை திருமணம் செய்து கொண்டார். காதலுக்காக அவர் அரச குடும்பத்தை துறந்தது உலக அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அவர் அமெரிக்காவில் குடியேறக்கூடும் என வதந்திகள் உலா வந்தன. அவை உண்மைதான் என்பது இப்போது நிரூபணமாகி உள்ளது.

  மாகோ, தனது காதல் கணவர் கீ கொமுரோவுடன் டோக்கியோவில் இருந்து பயணிகள் விமானத்தில் நியூயார்க் நகருக்கு நேற்று புறப்பட்டு சென்றார். அப்போது அவர்களைப் படம் பிடிக்கவும், பேட்டி காணவும் அங்கே 100-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களும், கேமராமேன்களும் குவிந்தனர். ஆனால் அவர்கள் எழுப்பிய எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்காமல் மாகோ, தனது காதல் கணவர் கீ கொமுரோவுடன் விமானத்தில் ஏறிச்சென்று விட்டார். கீ கொமுரோ நியூயார்க்கில் சட்டம் படித்து அங்கே வேலை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×