search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்பு பணி
    X
    நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்பு பணி

    கொலம்பியாவில் கடும் நிலச்சரிவு- 11 பேர் உயிரிழப்பு

    நரினோ மாகாணத்தில் உள்ள மலாமா மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் நேற்று பெய்த கனமழை காரணமாக கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது.
    பொகோடா:

    கொலம்பியாவின் நரினோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அம்மாகாணத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 

    இந்நிலையில், நரினோ மாகாணத்தின் மலாமா மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் தொடர் கனமழை காரணமாக நேற்று கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. மலையடிவாரத்தில் உள்ள வீடுகள் நிலச்சரிவில் சிக்கியதால், வீடுகளில் வசித்துவந்த பலர் மண்ணுக்குள் புதைந்தனர். 

    இந்த நிலச்சரிவு குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கிய 11 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். ஆனாலும், இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போன 20 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணிகளை மீட்புக்குழுவினர் தீவிரப்படுத்தியுள்ளனர். 
    Next Story
    ×