search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மஜு வர்க்கீஸ்
    X
    மஜு வர்க்கீஸ்

    அமெரிக்காவில் ஜோ பைடன் உதவியாளராக இந்தியர் நியமனம்

    அமெரிக்காவில் ஜனாதிபதி ஜோ பைடனின் துணை உதவியாளராகவும், வெள்ளை மாளிகை ராணுவ அலுவலக இயக்குனராகவும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மஜு வர்க்கீஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
    வாஷிங்டன்:

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், மஜு வர்க்கீஸ். இவர், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்கிய ஜோ பைடனின் பிரசார நடவடிக்கைகளுக்கான தலைமை செயல் அதிகாரியாகவும், மூத்த ஆலோசகராகவும் செயல்பட்டவர்.

    தேர்தல் வெற்றிக்கு பின்னர் ஜனாதிபதி ஜோ பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் பதவியேற்பு தொடர்பான ஏற்பாடுகளை கவனித்த தொடக்க குழுவின் 4 உறுப்பினர்களில் ஒருவராகவும் மஜு வர்க்கீஸ் பணியாற்றினார்.

    இந்த நிலையில் அவர் தற்போது ஜனாதிபதி ஜோ பைடனின் துணை உதவியாளராகவும், வெள்ளை மாளிகை ராணுவ அலுவலக இயக்குனராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர், பராக் ஒபாமா ஆட்சிக் காலத்திலும் வெள்ளை மாளிகையில் பல பொறுப்புகளில் செயல்பட்டிருக்கிறார். இவரது பூர்விகம், கேரள மாநிலம் திருவல்லா என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×