search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    அடுத்த ஆண்டு நடுப்பகுதி வரை கொரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்பில்லை: உலக சுகாதார அமைப்பு

    அடுத்த ஆண்டு நடுப்பகுதி வரை கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்பதை நாங்கள் உண்மையில் எதிர்பார்க்கவில்லை என்று என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
    இரண்டு மாதங்களுக்கும் குறைவான மனித பரிசோதனைகளுக்கு பின்னர் ஆகஸ்டு மாதத்தில் ரஷியா ஒரு கொரோனா தடுப்பூசிக்கு அதன் ஒழுங்குமுறை குழு ஒப்புதல் அளித்தது. சில மேற்கத்திய வல்லுநர்கள் அதன் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை கேள்விக்குள்ளாக்கினர்.

    அமெரிக்க பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பைசர் இன்க் ஒரு தடுப்பூசி அக்டோபர் பிற்பகுதியில் விநியோகிக்க தயாராக இருக்கும் என்று கூறியது. நவம்பர் 3-ம் தேதி நடைபெறும் அமெரிக்க தேர்தலுக்கு சற்று முன்னதாகவே இது கிடைக்கும் என்று கூறப்பட்டது.

    ஆனால் ஜெனீவாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடரபாளர் மார்கரெட் ஹாரிஸ் தடுப்பூசிகளின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்த கடுமையான சோதனைகளின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தி உள்ளார்.

    மேலும் அவர் கூறும்போது ‘‘அடுத்த ஆண்டு நடுப்பகுதி வரை கொரோனாவுக்கு எதிராக பரவலான தடுப்பூசிகளை உலக சுகாதார நிறுவனம் எதிர்பார்க்கவில்லை. மேம்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் தடுப்பூசிகள் எதுவும் இதுவரை உலக சுகாதார அமைப்பால் கோரப்பட்ட குறைந்தது 50 சதவீத அளவு செயல்திறனின் தெளிவான சமிக்ஞையை நிரூபிக்கவில்லை.

    3-வது கட்ட சோதனைக்கு அதிக காலம் எடுக்க வேண்டும், ஏனென்றால் தடுப்பூசி எவ்வளவு பாதுகாப்பானது என்பதை நாம் உணர வேண்டும், மேலும் அது எவ்வளவு பாதுகாப்பானது என்பதை நாங்கலும் காண வேண்டும்.

    இது மக்களிடையே பெரிய மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படும் தடுப்பூசி ஆராய்ச்சியின் கட்டத்தைக் குறிக்கிறது.

    சோதனைகளின் அனைத்து தரவையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். நிறைய பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது, தடுப்பூசி செயல்படுகிறதா என்பது எங்களுக்குத் தெரியாது. இந்த கட்டத்தில் அது பயனுள்ள செயல்திறன் மற்றும் பாதுகாப்பின் அளவைக் கொண்டிருக்கிறதா இல்லையா என்பதற்கான தெளிவான சமிக்ஞை எங்களிடம் இல்லை என கூறினார்.

    உலக சுகாதார அமைப்பும் கவி தடுப்பூசி கூட்டணியும் இணைந்து கோவாக்ஸ் எனப்படும் உலகளாவிய தடுப்பூசி ஒதுக்கீடு திட்டத்தை முன்னெடுத்து வருகிறது, இது தடுப்பூசிகளை நியாயமான முறையில் வாங்கவும் விநியோகிக்கவும் உதவும். சுகாதாரப் பணியாளர்கள் போன்ற ஒவ்வொரு நாட்டிலும் அதிக ஆபத்து உள்ளவர்களுக்கு முதலில் தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்தப்படுகிறது.
    Next Story
    ×