என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகாத்மா காந்தி
    X
    மகாத்மா காந்தி

    மகாத்மா காந்தி நினைவு நாணயம் வெளியிட இங்கிலாந்து திட்டம்

    மகாத்மா காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றது.
    லண்டன்:

    உலகில் பல நாடுகள் காந்தியின் போதனைகளை தினந்தோறும் கற்று வருகிறார்கள். காந்தியை ரோல் மாடலாக ஏற்று பல நாட்டில் தலைவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். பல நாட்டில் ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்பு குறியீடாக மாகாத்மா காந்தி திகழ்ந்து வருகிறார். ரத்தம் சிந்தாமல் போராட்டம் நடத்தி, மக்களின் ஒற்றுமையின் மூலமும், அமைதியான போராட்டங்கள் மூலமும் ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்த முடியும் என்ற வித்தையை கற்று கொடுத்தவர் காந்தி.

    இந்நிலையில் மகாத்மா காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றது.

    இது குறித்து இங்கிலாந்தின் நிதி மந்திரி ரிஷிசுனிக் கூறியதாவது:-

    இந்திய சுதந்திரத்திற்காக போராடிய மகாத்மா காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட ராயல் மின்ட் அட்வைஸரி கமிட்டி ஆலோசித்து வருகிறது. மேலும் காந்தி கருப்பு மற்றும் ஆசிய ,பிற சிறுபான்மை இன மக்களை அங்கீகரிப்பதற்காக அரும் பாடு பட்டார் என்பதை ஆலோசனை குழுவிடம் தெரிவித்து உள்ளதாக கூறினார்.

    மேலும் ராயல் மின்ட் அட்வைஸரி கமிட்டி வெளியிட்டுள்ள மின்னஞ்சலில் காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயத்தை வெளியிட (ஆர்எம்ஏசி) முடிவு தற்போது பரிசீலித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×