search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புயலால் மின்கம்பங்கள் சரிந்து கிடக்கும் காட்சி
    X
    புயலால் மின்கம்பங்கள் சரிந்து கிடக்கும் காட்சி

    பிலிப்பைன்சை தாக்கிய டிசோய் புயல் - பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு

    பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய டிசோய் புயல் காரணமாக ஏற்பட்ட மழை, வெள்ளம் ஆகிய விபத்துக்களில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
    மணிலா:

    பிலிப்பைன்ஸ் நாட்டை டிசோய் என்ற சக்தி வாய்ந்த புயல் தாக்கியுள்ளது. திங்கட்கிழமை இரவு புயல் கரை கடந்ததைத் தொடர்ந்து, மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசும் புயல் காற்றுடன் சேர்ந்து கனமழையும் கொட்டித் தீர்த்து வருவதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.

    நாட்டின் பல்வேறு நகரங்களில் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் லட்சக்கணக்கான பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வெள்ளம், நிலச்சரிவு போன்ற விபத்துக்களில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர் என நேற்று தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், புயல் காரணமாக ஏற்பட்ட விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பிகோல் மற்றும் மிமாரபோ நகரங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப சில நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது. 

    Next Story
    ×