என் மலர்

  செய்திகள்

  நிரவ் மோடியின் ஜாமின் மனு லண்டன் நீதிமன்றத்தில் தள்ளுபடி - மே 24 வரை சிறைக்காவல் நீட்டிப்பு
  X

  நிரவ் மோடியின் ஜாமின் மனு லண்டன் நீதிமன்றத்தில் தள்ளுபடி - மே 24 வரை சிறைக்காவல் நீட்டிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரூ.13 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடியில் தலைமறைவு குற்றவாளி நிரவ் மோடியின் ஜாமின் மனுவை மூன்றாவது முறையாக இன்று தள்ளுபடி செய்த லண்டன் நீதிமன்றம் அவரது சிறைக்காவலை நீட்டித்தது. #NiravModi #WestminsterCourt
  லண்டன்:

  மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ்மோடி (48) தனது உறவினர் மெகுல் சோக்சியுடன் சேர்ந்து பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன்பெற்று வெளிநாட்டுக்கு தப்பி ஓடினர்.  

  லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடி இங்கிலாந்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது கைதிகள் நெருக்கடி மிகுந்த வாண்ட்ஸ் வோர்த் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.

  இந்நிலையில், இந்தியாவுக்கு நாடுகடத்துவது தொடர்பான வழக்கு லண்டன் கோர்ட்டில் நடைபெற்ற வருகிறது. அப்போது அவர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார்.  



  அந்த மனுவை விசாரித்த வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நிரவ் மோடியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், இதுதொடர்பான அடுத்த விசாரணையை ஏப்ரல் 26-ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்த நிலையில் மூன்றாவதாக  வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நிரவ் மோடி சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

  இன்று இந்த மனுமீது விசாரணை நடந்தபோது சிறையில் இருந்த நிரவ் மோடி வீடியோ கான்பிரன்சிங் முறையில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். மூன்றாவது முறையாக தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்த நீதிபதி வழக்கின் மறுவிசாரணையை மே 24-ம் தேதிக்கு ஒத்திவைத்ததுடன்,  நிரவ் மோடியின் சிறைக்காவலையும் மே 24-ம் தேதிவரை நீடித்து உத்தரவிட்டார்.  #NiravModi #WestminsterCourt 
  Next Story
  ×