என் மலர்
செய்திகள்

கானா நாட்டில் இரு பேருந்துகள் நேருக்குநேர் மோதல் - 60 பேர் உயிரிழப்பு
மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான கானாவின் தென்பகுதியில் இன்று இரு பேருந்துகள் நேருக்குநேராக மோதிய விபத்தில் 60 பேர் உயிரிழந்தனர். #60killed #Ghanabuscollision #buscollision
அக்ரா:
கானா நாட்டின் தெற்கு பகுதியில் சமீபத்தில் கிழக்கு போனோ என்னும் தனி மாகாணம் உருவாக்கப்பட்டது.
இந்த மாகாணத்தின் வழியாக சென்ற இரு பேருந்துகள் நேருக்குநேராக மோதிய விபத்தில் 60 பேர் உயிரிழந்ததாக கிழக்கு போனோ போலீஸ் உயரதிகாரி ஜோசப் அன்ட்வி கியாவு தெரிவித்துள்ளார்.

அம்போமா நகரின் அருகே நடந்த இவ்விபத்தில் காயமடைந்த சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #60killed #Ghanabuscollision #buscollision
Next Story






