என் மலர்
செய்திகள்

நியூசிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 8 இந்தியர்கள் பலி
நியூசிலாந்தின் மசூதிகளில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி பொதுமக்களை கொன்று குவித்தனர். இச்சம்பவத்தின் போது 8 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என தெரிய வந்துள்ளது. #MosqueShooting #NewZealandShooting #IndiansDead
கிறிஸ்ட்சர்ச்:
நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 49 பேர் பலியாகினர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஐதராபாத்தைச் சேர்ந்த பர்ஹாஜ் அஷான், கரீம்நகரைச் சேர்ந்த முகமது இம்ரான் கான், தெலுங்கானாவைச் சேர்ந்த ஒசைர் காதர் உட்பட 8 இந்தியர்கள் இச்சம்பவத்தில் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இந்திய தூதர் சஞ்சீவ் கோலி கடந்த மார்ச் 16ம் தேதி, தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சம்பவம் தொடர்பாக பல்வேறு இடங்களில் இருந்து கிடைத்த தகவல்களின் படி, இந்தியா மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 9 பேர் மாயமானதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனது.

மனிதர்களுக்கு எதிராக மாபெரும் குற்றம் அரங்கேறியுள்ளது. நாங்கள் அவர்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து பிரார்த்திக்கிறோம்’ என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் ஐதராபாத்தைச் சேர்ந்த பர்ஹாஜ் அஷான், கரீம்நகரைச் சேர்ந்த முகமது இம்ரான் கான், தெலுங்கானாவைச் சேர்ந்த ஒசைர் காதர் உட்பட 8 இந்தியர்கள் இச்சம்பவத்தில் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அகமது இக்பால் ஜகாங்கீர் என்பவர் படுகாயமுற்றார். இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதில் ஒசைர் காதர்(25) நியூசிலாந்தின் பல்கலைக்கழகத்தில் ஏரோநாட்டிகல் என்ஜினீயரிங் படித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #MosqueShooting #NewZealandShooting #IndiansDead
Next Story