என் மலர்
செய்திகள்

இந்தோனேசியாவின் பபுவாவில் பேய்மழைக்கு 42 பேர் பலி
இந்தோனேசியாவின் பபுவா மாகாணத்தில் நேற்று பெய்த கனமழைக்கு 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.
இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணம் பபுவாவின் தலைநகரம் ஜெயபுரா அருகில் உள்ள சென்டானியில் நேற்று பேய்மழை பெய்தது. இதில் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இந்த பேய்மழைக்கு 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 21 பேர் காயமடைந்துள்ளனர். தற்போது மழை குறைந்துள்ளது. என்றாலும், மக்களை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். இன்னும் பலர் மழை வெள்ளத்தில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மீட்புப்பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் சுவாவேசித் தீவில் மழை மற்றும் நிலச்சரிவால் 70 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தோனேசியாவில் வழக்கமாக அக்டோபர் முதல் ஏப்ரல் மாதம் மழைக்காலமாகும். இதனால் வழக்கத்திற்கு மாறான கனமழை பெய்தது என்று கூற இயலாது.

Next Story