என் மலர்
செய்திகள்

இந்திய உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தகவல்
பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவியதால் இந்தியாவுக்கு சொந்தமான ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு ராணுவம் இன்று தெரிவித்துள்ளது. #PakistanArmy #Indianquadcopter
இஸ்லாமாபாத்:
காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் பாகிஸ்தானுக்குள் புகுந்த இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் பாலகோட் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி தரும் வகையில் இந்தியா மீது தாக்குதல் நடத்த வந்த ஒரு பாகிஸ்தான் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஒரு ஆளில்லா உளவு விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்தியாவை சேர்ந்த ஒரு போர் விமானத்தை வீழ்த்திய பாகிஸ்தான் அதில் சென்ற அபிநந்தன் என்ற விமானியை சிறைபிடித்து பின்னர் விடுதலை செய்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டு எல்லைக்குள் சுமார் 150 மீட்டர் தூரம் ஊடுருவியதால் இந்தியாவுக்கு சொந்தமான ஆளில்லா உளவு விமானத்தை ராக்சிக்ரி செக்டார் பகுதியில் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் ஆசிப் கபூர் இன்று தெரிவித்துள்ளார். #PakistanArmy #Indianquadcopter
Next Story