search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
    X

    ஆஸ்திரேலியாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

    ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு மாநிலமான குயின்ஸ்லாந்தில் கடந்த 24-ந்தேதி உருவான காட்டுத்தீ அங்கு நிலவி வரும் வறண்ட வானிலை மற்றும் வேகமாக வீசி வரும் காற்றால் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. #Wildfires #Australiawildfire
    சிட்னி :

    ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு மாநிலமான குயின்ஸ்லாந்தில் கடந்த 24-ந்தேதி பயங்கர காட்டுத்தீ உருவானது. தொடர்ந்து பரவி வரும் இந்த தீயால் 22 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பு நாசமாகி உள்ளது. அங்கு நிலவி வரும் வறண்ட வானிலை மற்றும் வேகமாக வீசி வரும் காற்றால் இந்த காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.

    இதனால் அந்த பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். மேலும் காட்டுத்தீ பரவி வரும் பகுதிகளை சேர்ந்த மக்கள் மிகுந்த உ‌ஷார் நிலையில் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.

    காட்டுத்தீயை அணைக்க நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ஆனால் அங்கு நிலவி வரும் மோசமான வானிலையால் இந்த பணிகள் மிகவும் மந்தமாகவே நடைபெற்று வருவதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். #Wildfires #Australiawildfire
    Next Story
    ×