search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லிபியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 12 பேர் கொன்று குவிப்பு- ராணுவம் அதிரடி
    X

    லிபியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 12 பேர் கொன்று குவிப்பு- ராணுவம் அதிரடி

    லிபியாவில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல்களில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 12 பேர் கொல்லப்பட்டனர். #LibyanArmy #ISMilitants
    திரிபோலி:

    லிபியாவின் தென்கிழக்கு பகுதியில் எகிப்து நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள குப்ரா மாவட்டத்தில் டெசர்பு என்கிற நகர் உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த நகரில் உள்ள போலீஸ் நிலையம் மற்றும் அரசு கட்டிடங்களை குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

    துப்பாக்கிகளால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 8 பேர் உயிர் இழந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோரை பயங்கரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர். பயங்கரவாதிகளின் இந்த அட்டூழியத்தை ஐ.நா. சபை கடுமையாக கண்டித்தது.

    இதற்கிடையே டெசர்பு நகரில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை விரட்டி அடிக்க ராணுவம் உத்தரவு பிறப்பித்தது. அதன் பேரில் நேற்று முன்தினம் ராணுவவீரர்கள் மற்றும் குழுவாக இணைந்து டெசர்பு போலீசார் நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து அதிரடி தாக்குதலை நடத்தினர். இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 12 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் ஆயுதங்கள் நிரப்பப்பட்ட பயங்கரவாதிகளின் வாகனங்கள் அழிக்கப்பட்டன. பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடங்களில் இருந்து துப்பாக்கி, வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. #LibyanArmy #ISMilitants
    Next Story
    ×