என் மலர்

  செய்திகள்

  மாலாவி அதிபருடன் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சந்திப்பு
  X

  மாலாவி அதிபருடன் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சந்திப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று மாலாவி அதிபர் பீட்டர் முத்தாரிக்கா-வை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
  லிலோங்வே:

  ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே நாடுகளை தொடர்ந்து தனது பயணத்தின் நிறைவுகட்டமாக இன்று மாலாவி நாட்டை வந்தடைந்தார்.

  தலைநகர் லிலோங்வே நகரில் இன்று மாலாவி அதிபர் பீட்டர் முத்தாரிக்கா-வை சந்தித்துப் பேசினார். இந்தியா-மாலாவி இடையிலான நட்புறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் விரிவான ஆலோசனை நடத்தினர்.

  இந்தியா-மாலாவி இடையே அமைதியான நோக்கத்துக்கான அணுசக்தி உற்பத்தி, இருநாடுகளில் இருந்தும் தேடப்படும் நபர்களை ஒப்படைத்தல் ஆகியவற்றுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையொப்பமாகின.  மேலும் பல்வேறு துறைகளில் பயிற்சி, கட்டுமானப் பணிகள் தொடர்பான தொழில்நுட்ப பரிமாற்றம், சுகாதாரம், வேளாண்மை, எரிசக்தி மற்றும் கணிம வளங்கள் தொடர்பான துறைகளில் இருநாடுகளும் இணைந்து ஒத்துழைக்கவும் இன்றைய ஆலோசனையில் தீர்மானிக்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். #VenkaiahNaidu #MalawiPresident #PeterMutharika
  Next Story
  ×