என் மலர்
செய்திகள்

ஜோர்டானில் பள்ளி பஸ் வெள்ளத்தில் சிக்கியது - 17 பேர் பலி
ஆப்பிரிக்க நாடான ஜோர்டானில் பள்ளி பஸ் வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். இதில் 13 பேர் மட்டும் காயமின்றி உயிர் தப்பினர். #Flood #schoolbusflood
ஷாரா மயீன்:
ஆப்பிரிக்க நாடான ஜோர்டானில் ஷாரா மயீன் என்ற சுற்றுலா தலத்துக்கு ஒரு பள்ளி பஸ் புறப்பட்டு சென்றது. அதில் 37 மாணவர்களும், 7 ஊழியர்கள் இருந்தனர். இவர்களுடன் மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் குடும்பத்தினரும் பயணம் செய்தனர்.
இவர்கள் ‘டெட் சீ’ எனப்படும் சாக்கடல் பகுதியில் சென்ற போது, திடீரென வந்த வெள்ளம் இவர்களது பஸ்சை அடித்துச் சென்றது. இதில் பஸ்சில் இருந்த 17 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். 13 பேர் மட்டும் காயமின்றி உயிர் தப்பினர்.
மீட்பு பணியில் ஜோர்டான் ராணுவம் ஈடுபட்டுள்ளது. அண்டை நாடான இஸ்ரேலின் ராணுவம் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே பக்ரைன் சென்ற ஜோர்டான் மன்னர் அப்துல்லா சுற்றுப் பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு நாடு திரும்புகிறார். #Flood #schoolbusflood
Next Story






