என் மலர்
செய்திகள்

வெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் இன்று 7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.#Earthquake
காரகாஸ்:
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று வெனிசுலா. வெனிசுலா நாட்டின் கிழக்குப் பகுதியில் இன்று திடீரென சக்திவாய்ந்த
நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் 7 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தை வெனிசுலா மற்றும் கொலம்பிய நாட்டு மக்கள் உணர்ந்ததாக தெரிவித்தனர். நிலநடுக்கம் ஏற்பட்டதும் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களும், வீடுகளில் இருந்தவர்களும் அலறியடித்து தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். #Earthquake
Next Story






