என் மலர்
செய்திகள்

தாய்லாந்து சிறுவர்களை காப்பாற்றிய இங்கிலாந்து நீச்சல் வீரர்களுடன் பிரதமர் தெரசா மே சந்திப்பு
தாய்லாந்தில் குகையில் சிக்கிக் கொண்ட சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட இங்கிலாந்தின் நீச்சல் வீரர்களை பிரதமர் தெரசா மே நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். #ThaiCaveBoys #TherasaMay
லண்டன்:
தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் 23-ம் தேதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர்.
குகையில் 17 நாட்களாக சிக்கி தவித்த கால்பந்து பயிற்சியாளர் மற்றும் சிறுவர்கள் 12 பேர் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு சியாங் ராய் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சியாங் ராய் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர்கள் அனைவரும் கடந்த வாரம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தாய்லாந்து குகையில் சிக்கிக் கொண்ட சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட இங்கிலாந்தின் நீச்சல் வீரர்களை பிரதமர் தெரசா மே நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
எண், 10 டவுனிங் தெருவில் அமைந்துள்ள பிரதமரின் வீடு மற்றும் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட இங்கிலாந்தின் நீச்சல் வீரர்களை அந்நாட்டு பிரதமர் தெரசா மே சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். #ThaiCaveBoys #TherasaMay
Next Story






