என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஷ்யாவில் கடும் நிலநடுக்கம்- உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு பாதிப்பு இல்லை
    X

    ரஷ்யாவில் கடும் நிலநடுக்கம்- உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு பாதிப்பு இல்லை

    ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும், உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் பகுதிகளுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. #EarthquakeHitsRussia #KamchatkaPeninsula
    மாஸ்கோ:

    ரஷ்யாவின் கிழக்கு முனையில் அமைந்துள்ளது கம்சட்கா தீபகற்பம். இந்த தீபகற்பத்தில் இன்று அதிகாலை 1.40 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தீபகற்பத்தின் தெற்கு முனையான ஓசர்நோவ்ஸ்கியில் இருந்து 58 மைல் தூரத்தில் கடலுக்கடியில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தாகவும், ரிக்டர் அளவுகோலில் 6.0 அலகாக பதிவாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகள் குலுங்கின. பொதுமக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். 6.0 ரிக்டர் அலகில் நிலநடுக்கம் ஏற்பட்டபோதிலும், பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. 

    ரஷ்யாவில் தற்போது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் இருந்து வெகு தொலைவில் இந்த தீபகற்பம் அமைந்துள்ளதால் போட்டிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த தீபகற்பத்தில் சிறியதும் பெரியதுமான 160 எரிமலைகள் உள்ளன. அவற்றில் 29 எரிமலைகள் உயிர்ப்புடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.  #EarthquakeHitsRussia #KamchatkaPeninsula
    Next Story
    ×