search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானில் சுயேச்சை வேட்பாளருக்கு ரூ.40 ஆயிரம் கோடி சொத்து
    X

    பாகிஸ்தானில் சுயேச்சை வேட்பாளருக்கு ரூ.40 ஆயிரம் கோடி சொத்து

    பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் முகமது உசேனின் சொத்து மதிப்பு ரூ.40 ஆயிரத்து 300 கோடி என தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். #MohammedHussain #Pakistanelections
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் வருகிற ஜூலை 25-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில் முஷாபர்கார் என்.ஏ.-182 தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக முகமது உசேன் என்கிற முன்னா ஷேக் போட்டியிடுகிறார்.

    இவர் தனது வேட்பு மனுவில் சொத்து மதிப்பு ரூ.40 ஆயிரத்து 300 கோடி என குறிப்பிட்டுள்ளார். அதில் 300 ஏக்கர் நிலம், மற்றும் தோட்டங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    3 வீடுகள் மற்றும் இதற்கான வீட்டு உபயோக பொருட்கள் இருப்பதாகவும், இவற்றுக்கு இதுவரை வரி செலுத்தவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இவரைப்போன்று எந்த ஒரு அரசியல்வாதியும் தனது சொத்து விவரத்தை வெளிப்படையாக கூறியதில்லை.



    இதுகுறித்து அவர் கூறும்போது, “தேர்தலில் போட்டியிடும் அரசியல்வாதிகள் தங்களது சொத்து மதிப்பை பொதுமக்களிடம் தெரிவிக்க வேண்டும். அதன்படி நான் எனது உண்மையான சொத்து விவரத்தை வெளிப்படையாக கூறியிருக்கிறேன்.

    அதுபோன்று பாகிஸ்தானில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் தங்களது சொத்து விவரங்களை வெளியிட தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் உத்தரவிட வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளார். #MohammedHussain #Pakistanelections
    Next Story
    ×