என் மலர்
செய்திகள்

2019 பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 300 இடங்களுக்கு மேல் கிடைக்கும் - பியூஷ் கோயல் உறுதி
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 300 இடங்களுக்கு மேல் பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என நிதி மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். #PiyushGoyal #BJP #2019Election
லண்டன்:
லண்டனில் நடைபெற்று வரும் இந்தியா யுகே வார விழாவில் மத்திய நிதி மந்திரி பியூஷ் கோயல் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
முத்ரா என்ற திட்டத்தின் மூலம் 120 மில்லியன் கடன்களை கொடுத்துள்ளோம். இந்த கடன் மூலம் மக்களை அவர்களது சொந்தக் காலில் நிற்க வைத்துள்ளோம். நாங்கள் தொடர்ந்து வங்கிகளை வலுப்படுத்துவோம். அரசு வங்கிகளை தனியார்மயமாக்குவது என்ற எண்ணம் இல்லை. அதுபோல நடக்காது.
அடுத்த 30 ஆண்டுகளுக்கான அடித்தளத்தை வலுப்படுத்துவதில் கடந்த 4 ஆண்டுகளாக செலவிட்டுள்ளோம். நிறைய கட்டமைப்பு மாற்றங்களை 4 ஆண்டுகளில் செய்து வந்துள்ளோம். நிதி பற்றாக்குறை அதிகமாக இருந்து வருகிறது. பண வீக்கம் இரட்டை இலக்கத்தில் உள்ளது.
மக்களுக்கும், நாட்டுக்கும் தேவையான நடவடிக்கையை மட்டும் எடுங்கள் என பிரதமர் மோடி எங்களிடம் அறிவுறுத்தி உள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜக 300-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். #PiyushGoyal #BJP #2019Election
Next Story






